Wednesday, December 26, 2007

எதிரொலி (இஸ்லாம்?) பதிவை பற்றி!

எதிரொலி என்றொரு பதிவை படித்தேன்! அதில் கீழ்கண்டவாறு இருந்தது!
///// இப்பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் தரும் முயற்சி ///////

நல்ல முயற்சி, வரவேற்கிறேன்! அவரகள் செய்ய வேண்டியது எல்லாம், அல் காய்தா, லஷ்கர் இ தொய்பா, பின்லேடன் ஆகியவற்றை கண்டிக்க வேண்டியதுதான், செய்து விட்டார்கள் என்றால், இந்த எதிரொலியை நம்பலாம்!

வெளிநாட்டினர் நிறைய நமது நாட்டில் நுழைந்து குண்டு வைத்துள்ளனர், ஒரு இந்திய இந்து வெளிநாட்டில் போய் குண்டு வைத்துள்ளானா? இஸ்லாமிய தீவிரவாதம் உலகளாவிவிட்டது! Globalaization! அதான் பிரச்சினை!

எதிரொலி படிக்க,
http://athusari.blogspot.com/

மோடி குற்றம் புரிந்தவரே! நீங்கள்?

மோடி குற்றம் புரிந்தவரே!
அந்த அளவுக்கு உண்மை, உலக அளவில் இஸ்லாமியர்கள் தீவிரவாத்தை ஆதரிப்பதும்!
எந்த ஓரு தீவிரவாத அமைப்பையும் இந்திய இஸ்லாமிய தலைவர்கள் இதுவரை கண்டித்ததில்லை!

நீங்கள் கண்டித்திருக்கிறீரகளா?

சோனியாவின் கயவாளித்தனம்!

இன்றைய தினமணியில் தலையங்கம் பார்த்தீர்களா?

சீனா போருக்கு தயாராகிறதாம். 6000க்கும் அதிகமான வீரர்களை இந்தியா சீனா பூடான் எல்லையில் சீனா குவித்துள்ளது! என்னமோ கம்யூனிஸ்ட்டுகளுக்கு பயந்துதான் காங்கிரஸ் வாயை திறக்காமல் இருக்கிறது என்றும் தலையங்கம் சொல்கிறது.
நாட்டின் மீது போர் தொடுத்தாலும் பரவாயில்லை, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற சோனியா வின் எண்ணம் நமக்கு புரிகிறது,
சீனா போருக்கு விரைவில் வரத்தான் போகிறது,
உங்க, எங்க சகோதரிகள், மனைவிகள் கற்பழிக்கபடத்தான் போகிறார்கள்,
அப்போது சோனியா இத்தாலியில் இருந்தபடி கட்டளைகளை பிறப்பித்து நம்மையெல்லாம் காத்தருள்வார் கண்டிப்பாக!

ஒன்றே ஒன்று கூற ஆசை....... FCUK!

Tuesday, December 25, 2007

பெண்ணியவாதியா நீங்கள்??!!!

Thamizachi said...
இலக்கியத்துறையில் ஈடுபட வரும் பெண்கள் ஆண்களின் காமவலைக்குள் விழுந்து விடுவார்களாம்! ////
என்னை பார்த்து நாங்கள் ஜெர்மனியில் கலை நிகழ்ச்சியெல்லாம் செய்கின்றோம். மற்றும் ஐரோப்பா முழுவதும் கலை நிகழ்ச்சிகள் செய்வோம் நீங்கள் கலந்து கொள்வீர்களா? எல்லா பொறுப்பும் எங்களுடையது தான் அருகில் இருந்த நண்பரைப் பார்த்து கண்சிமிட்டி கூறுகின்றார். நாம் வெளிவந்த நோக்கத்தை திசை மாற்றி செல்லும் பேச்சை ஆணாதிக்கம் என்பதா? காம உணர்வின் சீண்டல் என்பதா? ///// /////

எண்ணப்பறவை said...
////// நம் ஊரில் இப்படிப்பட்ட குள்ளநரிகளை பற்றி அறிவேன். ஆனால், ஐரோப்பாவிலும் இந்த நிலை என்பது வேதனையாகத்தான் உள்ளது. \\அந்தபோராட்டங்களை தமிழ்மண வாசர்களுடன் பகிர்ந்துகொள்ளவே எழுதுகின்றேன் .....\\பகிர்ந்து கொள்ளுங்கள், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். /////

சிவாஜி said...

மேற்கண்டவை தமிழச்சியின் பதிவில் படித்தது, எனக்கு தோன்றுவதை கீழே எழுதியுள்ளேன், தங்களின் கருத்துக்கள் என் சிந்தனையை மாற்றும்! '' சக இலக்கியவாதி யாராக இருந்தாலும் அவர்களை மட்டம் தட்டுவது இருக்கிறது, பெண்ணாக இருப்பின் அது பாலியல் மூலமாக இலகுவாகிறது! பெண்ணியம் பேசுபவர்கள் யாவரும் கூடலை அதன் சார்ந்த விசயங்களை பெண்ணுக்கு விழைக்கபடும் அநீதியாகவே பேசுகின்றனர்,
தேவையில்லையே!
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்துதான் தவறு செய்ய முடியும்!!
ஒரு பெண் பல ஆண்களுடன் தவறு செய்கிறாள் என்று கணக்கு பார்ப்பீர்களானால் அது பெண்களுக்குதான் இழுக்கு!!! "

Monday, December 24, 2007

தூக்கமே வர மாட்டேங்குதே...!

மண்டையை குடையும் சில கேள்விகள்...

* ஸ்டாலின் எப்போது தமிழக முதல்வர் ஆவார்?
* ராகுல் எப்போது பிரதமர் ஆவார்?
* அன்பு மணி எப்போது புதுவை முதல்வர் ஆவார்?
* கனிமொழி எப்போது மத்திய அமைச்சர் ஆவார்?
* அஞ்சா நெஞ்சனுக்கு என்ன பதவி ?

- கடவுளே தூக்கமே வர மாட்டேங்குதே...!

Tuesday, October 23, 2007

இந்த காரத்(M.P) தொந்தரவு தாங்க முடியல!

இந்த காரத் தொந்தரவு தாங்க முடியல. நானும் இப்போ கவுத்துட்வாங்க, நாளைக்கு கவுத்துடுவாங்க, நாளான்னிக்கு கவுத்துடுவாங்க, இல்ல இந்த காங்கிரஸ் வீரம் காட்டுனாங்களே ஆரம்பத்துல, (பிரதமர், வேணும்னா ஆதரவை வாபஸ் வாங்கிக்கங்கனார்) அதே மாதிரி மறுபடியும் ஏதாவது சொல்லுவாருன்னு பாத்தா, ஹூம்.....! இப்போ இன்னைக்கு காரத் அமர்சிங், சந்திரபாபு நாயுடு போன்றோர்களை சந்திக்க போறாராம். இன்னைக்கு கெடு என்னையா ஆச்சு, பன்னாடைகள் இந்த விசயத்துல பேசாத பேச்சு இல்லை. கம்யூனிஸ்ட்கள், சோ சொல்வது போல கண்டிச்சுட்டே இருப்பாங்க போல, நாமதான் வேல மெனக்கட்ட மாதிரி.... (title la காரத் பக்கத்துல போட்டுருக்கிற M.P பட்டம் சரிதானே..? ம்ம்...?)

Sunday, October 21, 2007

டி.ஆர். பாலு - சாக்கடை - முத்துக்கள்!

டி.ஆர்.பாலு தினசரி அறிவுபூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சில முத்துக்களை உதிர்ப்பார். இன்று உதிர்த்தது, "தலைவர் கலைஙர் அவர்களால் துவங்கபட்ட சேது சமுத்திரதிட்டம்" அவராலேயே கூடிய விரைவில் துவங்கி வைக்கபடுமாம்!

********** அப்டியாங்க......? **********

(சாக்கடை நாத்தம் எங்கிருந்தோ வருதுல்ல....? ஸாரி...! கிளரிட்டேன்...!)

ஸ்ரேயா - இயற்கை உரம்?

சற்றுமுன் இயற்கை உரத்தால் விளைந்த காய்கறிகள் நெல்லை மாவட்டத்தில் ஒருஇயற்கை உர சந்தையில் நல்ல விலைக்கு போவதாக கலைஙர் டிவியில் காட்டினார்கள், சீக்கிரமாகவும் விற்று விடுகிறதாம்,

எல்லா மாவட்டத்திலும் தொடங்க அரசு முயற்சி எடுத்தால் நன்றாக இருக்கும்!

ஸ்ரேயா எதற்க்கு இங்கே என்கிறீர்களா? வந்ததுக்கு ஒரு உப்பு ஒங்களுக்கு!

Saturday, October 20, 2007

தமிழ் வெங்காய பஜ்ஜி...!

சற்று முன் மக்கள் தொலைக்காட்சியில் திரு குழந்தைசாமி அவர்கள் பினாத்திகொண்டிருந்தார், அந்த சமயத்தில் மொழி திரைபடம், ஹிட் மேல ஹிட், பாட்ஷா படம், ஹரிஹரனின் பாடலுடன் கூடிய கிறுக்குதனம் ஆகியவை மற்ற தொலைக்காட்சிகளில் ஓடிகொண்டிருந்தது.
நான் அனைத்தையும் தவிர்த்து தமிழ் உணர்வு மேலிட மக்கள் தொலைக்காட்சியின் தமிழ் ஜல்லியை பார்த்து கொண்டிருந்தேன்.
கு.சாமி பெரியாரை பற்றி பெரிய அபிப்ராயம் வைத்திருக்கிறார், அதே சமயம் தமிழை போற்றுவோம் என்றும் கூறுகிறார், முரண்பாடு, மதம் மேல் நம்பிக்கை தேவை இல்லை அந்த அடையாளமே மனிதனுக்கு தேவையில்லையாம், ஆணால் தமிழன் என்று சொல்லனுமாம்!
வெங்காயம்!!
ஆங்கில மோகத்தை வேரறுத்த பிறகுதான் தமிழின் பெருமை மக்களுக்கு புரியும், அந்த மோகத்தை வேரறுக்க வேணுமெனில் அதை இலக்கண சுத்தமாக கிராமத்திலிருந்து ஆரம்பித்து அனைவருக்கும் கற்று கொடுத்து விடுவதே!

ரஜினியின் அடுத்த படம்!

ரஜினியின் அடுத்த படம் பற்றிய செய்தி இன்று வெளியானது, அனேகமாக நாந்தான் முதல் ஆளாக இதை வெளியிடுகிறேன் இங்கே என்று நினைக்கிறேன், ஏனென்றால் .................... ********************** %%%%%%%%%%%%%%%%%%
இப்படி ஒன்று நடந்திருந்தால் எல்லோருக்கும் இந்நேரம் தெரிந்திருக்குமே ஹி ஹி...! இந்த நாள் ஒரு இனிய நாளாகட்டும்!

Friday, October 5, 2007

மாசிலாவிற்க்கு!

என்னா மாசிலா ஐயா...? மாசு பட்டுடீங்களே!http://naalainamathae.blogspot.com/2007/10/blog-post_5219.html

தாங்களுமா கருணாநிதி என்ற சக்கரவர்த்திக்கு அடிமை? வேதாந்தியை BJP கட்சி தெளிவாக கண்டித்திருக்கிறது, கண்டனமும் தெரிவித்தாகிவிட்டது! இந்து மத அமைப்பு போன்றவர்களும் பகவத்கீதையை மேற்கோள் காட்டியதற்காக அவரை கண்டித்திருக்கிறார்கள்! அவர் கண்டிக்கத்தக்கவரே, சட்டப்படியான நடவடிக்கையும் தேவையே! ஆணால் தங்களின் - ஜனநாயக தலைவனின் - (BJP அலுவலகம் தாக்குதல், பேருந்துகள் முடக்கம், சன் DTH விற்பனையாளர்களை காவல் துறை கொண்டு மிரட்டுதல், கடைகள் மூட மிரட்டல் விடுத்தது, இன்னும் எத்தனை எத்தனை அராஜகங்கள்?) சமூகத்தொண்டுகள் பற்றியும் எழுதுங்களேன்!

Wednesday, October 3, 2007

பகுத்தறிவும் கருணாநிதியும்!

பகுத்தறிவிற்க்கும் தற்போழுது உள்ள கருணாநிதிக்கும் உள்ள தொடர்புகள் பற்றி எழுதுங்களேன், முக்கியமாக, இந்த வேண்டுகோளை கலைஞர் கருணாநிதி ப்ளாக் ஆரம்பித்திருப்பவர்களுக்கும் மற்றும் இலைக்காரன் போன்ற இந்து மதம் மீது நல்லபிப்ராயம் வைத்திருக்கும் அனைவருக்கும் முன் வைக்கின்றேன்! கலந்து கொள்ளுங்கள் இந்த போட்டியில், இந்த வார இறுதிக்குள் வெளியிடுங்கள்! நன்றி!

Sunday, June 17, 2007

கொப்பும் குலையுமாக சிவாஜி ஸ்ரேயா!

பிறகென்ன வலை நண்பர்களே,

சிவாஜி பார்த்திருப்பீர்கள்! போதும் போதும் என்கிற மாதிரி விமர்சனமும் படிச்சாச்சு!

நிறுத்திக்கலாம் தானே இதோடு!

அதற்க்கு முன், என் கருத்துக்கள் சிலவற்றையும் பார்த்துடுங்களேன்!

- சிவாஜி நன்றாக இருக்கிறது!

கதை, (சங்கருக்கு வேறு கதை களம் இல்லை என்றே நினைக்கிறேன்)திரைக்கதை,வசனம், நடிகர்கள் மற்றும் நடிகைகள் (ஸ்ரேயா, coooool இல்ல?!) நன்றாக நடித்துள்ளனர்! மொத்தத்தில் குறை சொல்லத் தேவை இல்லாதபடிக்கு வந்துள்ளது!

அப்போ குறை சொல்லுபவர்கள்... வருகிறேன்,

நிறைய வலை பதிவர்கள், குறை கூறியிருக்கிறார்கள், சிவாஜி படத்தை பற்றி அல்ல, .... ரஜினியை பற்றி,

வெறும் வயித்த்தெரிச்சலாகவே உள்ளது அவர்களுக்கு, ரஜினியை குறை கூற வேண்டுமென்றால் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமே, இப்போது என்ன நேரம் பார்த்திருக்கீறீர்கள்?

ஈழ தமிழர் ஒருவர் பெங்களூர் சொத்து குவிப்பில் ஆரம்பித்து காவிரி உண்ணாவிரதம் என்றெல்லாம் போய் கடைசியில் நெடுமாறன் போல் ஈழ பிரச்சினைக்கு குரல் எதுவும் அவர் கொடுக்க வில்லையாம், அய்யகோ, காவிரி பிரச்சினையை வைத்து இது வரை எல்லா நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகளும் அரசியல் மட்டும்தான் செய்திருக்கின்றனர்! ரஜினி மட்டும்தான் உச்ச் நீதிமன்ற தீர்ப்பு காற்றில் கலப்பதை நினைவூட்டி உண்ணாவிரதம் இருந்தார்! நெய்வேலி போராட்டத்தில் எவ்வளவு அரசியல் அசிங்கங்கள் அரங்கேறியது, நினைவிருக்கிறதுதானே?

சொத்து பற்றி பேசுகிறார்கள், எல்லோரும் கூறுவதை, படித்தது போன்றவற்றை வைத்து பார்க்கும் போது ரஜினி மட்டும்தான் வெள்ளையாக வாங்கி, அமிதாப் போன்றவர்கள் போல் வரி பாக்கி வைக்காமல் முறையாக வரி கட்டி வருகிறார். அப்படி சம்பாதிக்கும் பணத்தில் அவர் எங்கே சொத்து வாங்கி குவித்தால் என்ன?

மத்தியிலும்,மாநிலத்திலும் ஊலா பாலா ஆட்சியாளர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த வேளையில்,...

உண்மையில் ரஜினியிடம் இருக்கும், தெரியும், தெரிவதாக சொல்லபடும் தவறுகள் யாவும் மிகச்சிறியதுதான்! எனது மதிப்பில், ரஜினி "THE BOSS" தான், இப்போதைக்கு!

Monday, June 11, 2007

சதுர்வேதியும் + நீங்களும் & இந்து மதமும்!

இந்து மதத்தை 50 - 60 ஆண்டுகள் வாழ்ந்து அழுகிப்போகும் அற்ப மணிதர்கள் யாரும் காப்பாற்ற முடியாது!

இதை பற்றி, மதத்தை பற்றி பேசும், விவாதிக்கும் யாரும் உள்நோக்கம் மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளவர்களே, உலக அளவில் கூட...!

Friday, June 8, 2007

ரஜினி - தி மொட்ட பாஸ்!

####################################################
####################################################
#################%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
%%%%%%%%%%%%%%%%%%

இன்னைக்கு மேட்டர் நிறைய இருக்கு ஆனால்,
எழுத பிடிக்காமல் போய் விட்டது.

ஆனா, நாளைக்கு வந்து பாருங்க, சரியா.....?!

(வந்ததற்க்கு காரணம் தலைப்பு தானே,

ஹி, ஹி..! படம் கண்டிப்பா ஒரு வருசம் தான்!! )

Wednesday, June 6, 2007

கருமம்! இதை படிக்காதீங்க!!

எனக்கும் என் நண்பருக்கும் சிறிய வாக்கு வாதம், மன்மோகன் சிங் பாவமா?
அல்லது
கருணாநிதி பாவமா?
யாருமே நினைத்ததை செய்ய முடியவில்லை!
இவர்கள் இருவரும் மைனாரிட்டியாக இருந்தும் பதவியில் இருக்க வேண்டும் என்பது அவர்களது ஜாதகம் போல, வேறு என்ன சொல்வது!
(பொலம்ப உட்டுடானுங்களே நாதாரி பசங்க....!)

சரோஜா சாமான் நிக்கோலா...!

ஒன்னும் தெரியாத பாப்பா போட்டுகிட்டாளாம் தாப்ப்பாழ் (தாழ்ப்பாள்!)

இதற்கு மேல் சொல்ல முடியாது என்னால், எனக்கென்று ஒரு தராதரம் உண்டு!

இதற்கு மேல் வேண்டுமென்றால் மஞ்சள் துண்டு மாமாவிடம் (தமிழக முதல்வரை) அணுகவும்!

05-ஜூந்2007 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிக்கையை படிக்கவும்.(06/ஜூன் தினகரன்!)

அமைச்சர் ஆனார் கனிமொழி!

கனிமொழி அரசியலுக்கு வந்து இவ்ளோ நாளாவுது, இன்னும் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காதது, ஏமாற்றமே அளிக்கிறது!

என்னவென்று யாரும் கவலை பட்டதாக தெரிய வில்லை!

Tuesday, June 5, 2007

50 பேர் ஆண்கள்! ஒரே ஒரு பெண்!

நாகூர் தியேட்டரில் கேசினோ ராயல் (007-bond picture ) நேற்று மாலை 6 மணி காட்சி போனேன், நல்ல காற்று, கூட்டம் அதிகம் இல்லை! அழகாக ரசித்து படம் பார்த்தேன்.

ஆங்கில படங்களை தமிழ் படுத்தி ஓட்டுகின்றனர். ஓடுகிறது. தினசரி 3 காட்சி வேறு!

சுமார் 50 பேர் ஆண்கள்! ஒரே ஒரு பெண்! கூட்டம் அவ்ளோதான்!

பத்து ரூபாய் டிக்கெட், 3 ரூபாய் பைக்குக்கு! (நிச்சயமான பொழுதுபோக்கு!)

எல்லாம் சிவாஜி யால் வந்த வினை!

வேறு படங்கள் இல்லை.

சில வருடங்களுக்கு பிறகு போகின்றேன் இந்த தியேட்டருக்கு, பாருங்கள் எங்க ஊர் தியேட்டரை!

Friday, June 1, 2007

முட்டா புண்ணாக்கு தமிழகம்! M.P.கனிமொழி!

ஜூனியர் விகடன் கேள்வி :

உங்கள் சகோதரர் ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, 'நானா ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின் போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தார்!' என்று உங்கள் அப்பா முன்பொருமுறை சொல்லிருக்கிறார். 3 வருடங்களுக்கு முன்னால் தயாநிதிமாறன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார்... அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும் போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?

கனிமொழி பதில் :

"உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள். தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.

அதே சமயம், ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்... ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடு முரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்து தான் பாதிக்கிறது. வாரிசுகளும் அவரது பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது.

இருந்தாலும், தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.

நீங்கள் குறிப்பிடும் 'திணிப்பு' என்ற வார்த்தயை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பொறுத்த வரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகுகாலத்துக்கு உட்கார வைத்து விட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால் அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுகொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக அண்ணனை... அவரை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிபடியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, 'திணிப்பு' குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்"

இப்பொழுது சிவாஜியின் (பேர கேட்டவுடனே சும்மா அதிருதா......!) கேள்விகள்!
இன்னொரு முறை மேலே உள்ள ஜூனியர் விகடனில் வந்த கனிமொழியின் பேட்டியினை படியுங்கள்!

எத்தனை சால்ஜாப்புகள்!, இந்த 4 வார்த்தைகளை கவனியுங்கள்!
'அதேசமயம்', 'இருந்தாலும்', 'ஆனால்', 'ஒவ்வொருவரும்'

//// "உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள்.////

உலகத்திலுள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் வாரிசுகளுக்காக வேறு யாரும் வளர்ந்துவிடாமல் பார்த்து கொள்ளவில்லை, உங்கள் அப்பா அதை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறார்! உலகத்தில் உள்ள வாரிசுகள் எல்லாம் கட்சியால் கொண்டு வரபட்டவர்கள், அமெரிக்காவை சொல்லி இருக்கிறீர்கள்! புஷ் ஷின் அப்பாவிற்க்கு பிறகு கட்சிக்கு வேறு வேறு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்! நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள்!

இங்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவரை தவிர்த்து வேறு யாரும் கட்சிக்கு தலைவர் ஆகிவிட முடியுமா?

முதலமைச்சராக யாரும் ஆகிவிட முடியுமா?

முடியுமானால், எப்பொழுது முடியும் என்று சொல்லுங்கள்!

இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்து பதவி ஏற்கும் நிலையில் உள்ளவர்களை தாங்கள் பட்டியல் போட முடியுமா?

மூச்சுக்கு 300 முறை தொண்டர்கள் தொண்டர்கள் என்று சொல்லுகிறீர்களே, ஏன் திமுகவினர் என்று கூற வாய் வரவில்லையோ? எப்படி வரும், திமுகவினரை வெறும் "தொண்டர்களாகவே" உணர்ந்து இருக்கிறீர்கள் இதுவரையிலும்! தங்கள் அப்பாவும் அப்படித்தான் கூறுவார்!
ராஜ பரம்பரை அயிற்றே இருக்காதா பின்னே...!

//// இருந்தாலும் , தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.////

தங்களை கொண்டுவந்த அந்த மூத்த தலைவர், அனுபவசாலி யார்? சொல்லுவீர்களா?
தங்களை கொண்டுவந்த காலச்சூழல், வெரும் உங்கள் குடும்ப காலச்சூழல் தானே? அல்லது இந்த தமிழ் நாட்டுக்கு தங்களின் அரசியல் தேவை என்ற ஒரு காலச்சூழலா? இந்த காலச்சூழல் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்!

//// தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, 'திணிப்பு' குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்" ////

ஆக இதை எல்லாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர,

நீங்கள் சரி ஆகத்தான் செய்கிறீர்கள்,

நாம் தான் (தமிழகம் தான்) திணிப்பு அது இது என்று புரிந்து கொள்ளாமல் பினாத்துகிறோம்!

இந்த 'நன்னாரிக்கு' தெளிவு கொடுத்த கனிமொழி அக்கா வுக்கு ஒரு "ஓ" போடுவோம்!

Thursday, May 31, 2007

முட்டா புண்ணாக்கு தமிழகம்! M.P.கனிமொழி!

ஜூனியர் விகடன் கேள்வி :
உங்கள் சகோதரர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் பற்றி, 'நானா ஸ்டாலினை அரசியலுக்கு கொண்டு வந்தேன்? எமர்ஜென்சியின் போது அன்றைய பிரதமர் இந்திராகாந்திதானே மிசாவில் சிறையிலடைத்து ஸ்டாலினை பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்தார்!' என்று உங்கள் அப்பா முன்பொருமுறை சொல்லிருக்கிறார். 3 வருடங்களுக்கு முன்னால் தயாநிதிமாறன் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டார்... அடுத்து நீங்கள்! கட்சிக்காக பல தியாகங்களைச் செய்த பலர் இருக்கும் போது இப்படி ஒரு வாரிசு திணிப்பு சரியா?

கனிமொழி பதில் :
"உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள். தி.மு.க என்பது மாபெரும் இயக்கம். இதன் வளர்ச்சிக்காக எத்தனையோ பேர் பெரும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். தியாகங்களை செய்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் கட்சி இல்லை.
அதே சமயம், ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்... ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர்தான் ஒரு குடும்பத்துக்கும் தலைவராக இருக்கிறார். அவருடைய பொது வாழ்க்கை என்பது கரடு முரடானது. பொது வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் அவரது குடும்பத்தையும் சேர்த்து தான் பாதிக்கிறது. வாரிசுகளும் அவரது பளுவைச் சுமக்கும் நிலை ஏற்படுகிறது.
இருந்தாலும், தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை.
கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.
நீங்கள் குறிப்பிடும் 'திணிப்பு' என்ற வார்த்தயை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை பொறுத்த வரையில் யாரையும் ஒரு உயர்ந்த இடத்தில் திணித்து வெகுகாலத்துக்கு உட்கார வைத்து விட முடியாது. அந்த நபருக்கு கட்சி ஒரு ப்ரொமோஷன் தரலாம். ஆனால் அதை கட்சியின் தொண்டர்கள் முழுமனதாக ஏற்றுகொண்டால்தான் அவர் நிலைக்க முடியும். குறிப்பாக அண்ணனை... அவரை கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இத்தனை காலமும் கட்சிக்குள் படிபடியாக வளர்ந்து, இன்றைக்கு இந்த அளவுக்கு செல்வாக்குடன் இருக்க முடியாது. தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, 'திணிப்பு' குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்"

இப்பொழுது சிவாஜியின் (பேர கேட்டவுடனே சும்மா அதிருதா......!) கேள்விகள்!

இன்னொரு முறை மேலே உள்ள ஜூனியர் விகடனில் வந்த கனிமொழியின் பேட்டியினை படியுங்கள்!

எத்தனை சால்ஜாப்புகள்!, இந்த 4 வார்த்தைகளை கவனியுங்கள்!
'அதேசமயம்', 'இருந்தாலும்', 'ஆனால்', 'ஒவ்வொருவரும்'
//// "உலகத்தில் எல்லா நாடுகளிலும் வாரிசுகள் அரசியலுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள், அமெரிக்கா உட்பட இப்போது உலக அரசியலில் யாரும் வாரிசு அரசியல் பற்றி பேசுவதில்லை. இங்கே தி.மு.க-வை மட்டும்தான் குறிவைத்து பேசுகிறார்கள்.////
உலகத்திலுள்ள கட்சி தலைவர்கள் எல்லாம் வாரிசுகளுக்காக வேறு யாரும் வளர்ந்துவிடாமல் பார்த்து கொள்ளவில்லை, உங்கள் அப்பா அதை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறார்! உலகத்தில் உள்ள வாரிசுகள் எல்லாம் கட்சியால் கொண்டு வரபட்டவர்கள், அமெரிக்காவை சொல்லி இருக்கிறீர்கள்! புஷ் ஷின் அப்பாவிற்க்கு பிறகு கட்சிக்கு வேறு வேறு தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்! நாட்டையும் ஆண்டிருக்கிறார்கள்!
இங்கு உங்கள் குடும்பத்தில் உள்ளவரை தவிர்த்து வேறு யாரும் கட்சிக்கு தலைவர் ஆகிவிட முடியுமா?
முதலமைச்சராக யாரும் ஆகிவிட முடியுமா?
முடியுமானால், எப்பொழுது முடியும் என்று சொல்லுங்கள்!
இரண்டாம் கட்ட தலைவர்கள் அடுத்து பதவி ஏற்கும் நிலையில் உள்ளவர்களை தாங்கள் பட்டியல் போட முடியுமா?

மூச்சுக்கு 300 முறை தொண்டர்கள் தொண்டர்கள் என்று சொல்லுகிறீர்களே, ஏன் திமுகவினர் என்று கூற வாய் வரவில்லையோ? எப்படி வரும், திமுகவினரை வெறும் "தொண்டர்களாகவே" உணர்ந்து இருக்கிறீர்கள் இதுவரையிலும்! தங்கள் அப்பாவும் அப்படித்தான் கூறுவார்!
ராஜ பரம்பரை அயிற்றே இருக்காதா பின்னே...!

//// இருந்தாலும் , தி.மு.க போன்ற தி.மு.க போன்ற ஜனநாயக அமைப்புக்குள் ஒருவரை கொண்டுவருவது என்பதை அந்த தலைவர் மட்டுமே தீர்மானிப்பதில்லை. கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள், அனுபவசாலிகள், காலச்சூழல் ஆகியவற்றை பொறுத்தே அத்தகைய முடிவுகள் எடுக்கபடுகின்றன.////

தங்களை கொண்டுவந்த அந்த மூத்த தலைவர், அனுபவசாலி யார்? சொல்லுவீர்களா?
தங்களை கொண்டுவந்த காலச்சூழல், வெரும் உங்கள் குடும்ப காலச்சூழல் தானே? அல்லது இந்த தமிழ் நாட்டுக்கு தங்களின் அரசியல் தேவை என்ற ஒரு காலச்சூழலா? இந்த காலச்சூழல் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன்!

//// தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எவருமே அரசியலில் நீடிக்க முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே, 'திணிப்பு' குறித்த கேள்விக்கே இடமில்லாமல் போய்விடும்" ////

ஆக இதை எல்லாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர,
நீங்கள் சரி ஆகத்தான் செய்கிறீர்கள்,
நாம் தான் (தமிழகம் தான்) திணிப்பு அது இது என்று புரிந்து கொள்ளாமல் பினாத்துகிறோம்!
இந்த 'நன்னாரிக்கு' தெளிவு கொடுத்த கனிமொழி அக்கா வுக்கு ஒரு "ஓ" போடுவோம்!

Wednesday, May 30, 2007

மு.க.அழகிரி-குடியரசு தலைவர் வேட்பாளர்!

அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்குற விசயமா கலைஞரே அவசரமாக தில்லி போயிருக்காருன்னா,

நிச்சயமா சொல்றேன், அடுத்த பிரசிடென்ட் நம்ம அழகிரி அண்ணந்தான்பா!

(தினமணி 'அடடே...!' விலிருந்து சுட்டது!)

Tuesday, May 29, 2007

தேவதை இவள்!

Monday, May 28, 2007

நர்ஸ் ஜெயலஷ்மியின் 'நிர்வாண' கிக் ஸ்டில்ஸ்

வாங்க, வாங்க... !
நர்ஸ் ஜெயலஷ்மியின் 'நிர்வாண' கிக் ஸ்டில்ஸ் பாக்க வந்தீங்களா, என்னா பாஸு நீங்களுமா....? "கன்னத்துல போட்டுக்கங்க, கடவுளே, எனக்கு நீதான் நல்ல புத்தியை கொடுக்கனும்" அப்டின்னு...!

யப்பா, என்னா ஸ்டில்லு...என்னா ஸ்டில்லு....!

what a great stills..........wow,

A REAL SUPER STAR!

Sunday, May 27, 2007

'ஆண்டை' கருணாநிதிக்கு 'அடிமைகள்' நாம்!

"மஹா ஆண்டை"

"ஆண்டை"

.

"பால ஆண்டை"

"குட்டி ஆண்டை"

இதை படிக்கும் நீங்கள் ஒருக்கால், ஒரு "ஆண்டை" யின் அடிமையாக இருக்க கூடும்!

சிந்தித்து பார்த்து, தெரிந்து கொள்ளுங்கள் அடிமையா இல்லையா என்று!
மகேந்திரன்.பெ என்பவர் கேட்டிருக்கிறார், ஏன்? எங்கு? இல்லை வாரிசு அரசியல் என்று, உ.தா. காங்கிரஸ் லிருந்து அமெரிக்கா புஷ் வரை காண்பித்து இருக்கிறார்!

அவருக்கு உறைக்காமல் போன ஒரு விசயம், அவர்கள் மற்றும் அங்கே எல்லாம் தங்கள் வாரிசுக்காக கட்சியையும், ஆட்சியையும் வேறு ஒருவருக்கு விட்டு விடாமல், கவனமாக, எல்லா தகிடு தத்தங்களும் செய்து பிடித்து வைக்க வில்லை ஐயா! இடையில் யார் யாரோ கட்சிக்கு தலைமை தாங்கி உள்ளனர்! யார் யாரோ ஆட்சியும் புரிந்துள்ளனர்!
அங்கே எல்லாம் வாரிசுகள் (வாரிசு என்பது இலாபம் தான்!) அவர்கள் திறமையாலோ அல்லது அந்த கட்சி வேண்டும் அவரின் பிரபலத்துக்காகவோ தான் வந்துள்ளனர்!

எல்லோரும் மூக்கை பிடித்துக்கொள்ளும் அளவுக்கு வாரிசுகளின் அப்பாவோ தாத்தாவோ நடந்து கொள்ள வில்லை!

நடிகை வரலாமா, நடிகர் வரலாமா என்கிறார், வரலாம்! வருபவர்களுக்கு வேறு ஒரு தொழில் சம்பாத்தியத்துக்கு இருந்தால் தான் சாமி நல்லது, அரசியல் தொழிலை நம்பி வந்தாரானால்? ஹா ஹா ஹா!

தமிழகத்து இரு பெரிய கட்சிகள் இப்பொழுது உள்ள நிலையில் அதிமுக மற்றும் ஆண்டையின் தி.மு.க! இரண்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை, அதிமுக சார்பில் ஜெயா பதவி ஏற்கிறார், தி.மு.க சார்பில் ஆண்டை பதவி ஏற்கிறார்!

ஆண்டையின் திமுக அழிய வேண்டிய கட்சி! எத்தனை தலைமுறை ஆணாலும் சரி, ஆண்டையின் குடும்பம் தான் நம்மை எல்லாம் ஆளப்போகிறது, நாமெல்லாம் அந்த ஆண்டை வாரிசுகளின் திறமைகளை பற்றி மகேந்திரன்.பெ மாதிரி புளங்காகிதம் அடைந்து மீண்டும் மீண்டும் மீண்டும் ஆண்டையின் அடிமை சாசனத்தில் மகேந்திரன்.பெ மாதிரி சந்தோஷத்துடன் கையெழுத்திடுவோம்!

தமிழகத்துக்கு விமோசனம் வேண்டுமெனில்....
(என்ன செய்ய வேண்டும் என்று பின்னூட்டம் இடுங்களேன்...!)

மதுசூதனன் என்பவர் நன்றாகவே எழுதி உள்ளார். சிந்திக்க வேண்டியது தான்! தேவை இல்லாமல் அவரை போட்டு குதறி இருக்கிறார் மகேந்திரன்.பெ என்ற ஒரு ஆண்டான் அடிமை!

மகேந்திரன்.பெ எழுதியதை படிக்க...!

http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_27.html

மதுசூதனன் எழுதியதை படிக்க...!

http://puthuyugam.blogspot.com/2007/05/blog-post_26.html

Saturday, May 26, 2007

சிவாஜி படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

சிவாஜி படத்தின் புதிய ஸ்டில்ஸ்!

திரிஷா அம்மா + விக்ரம்!

நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் எப்படி ஒடுகிறது என்று பார்த்தால் இதான் விசயமா?

ஒரே அக்கப்போர் மேட்டரா இருக்கே.... !

கடந்த நக்கீரனில் ஒரு செய்தி இது.... !

விக்ரம் திரிஷா வுடன் நடு நிசி வரை 'பப்' பில் கூத்தடித்து விட்டு பிறகு கிளம்பி கிண்டி யில் உள்ள ஹோட்டலுக்கு சென்று திரிஷா அம்மாவுடன் தங்கிவிட்டு விடிகாலையில் வீட்டுக்கு செல்வாராம்!

இது ஒரு மேட்டரா?

இதற்கு அவர்கள் கோர்ட்டுக்கு செல்ல மாட்டார்களோ?

என்ன ஆதாரமோ? என்னமோ போங்க,

இந்த பதிவு அப்படிதான் அதிகமா "கிளிக்" ஆக போகுது!

வாழ்க தமிழ் நெஞ்சங்கள்!