Friday, May 22, 2009

இலங்கையில் இவ்வளவு கோரம், காரணம் ராசீவா? பிரபாகரனா?


இலங்கையில் இவ்வளவு கோரம், காரணம் ராசீவா? பிரபாகரனா?
நான் 7வது படிக்கும் வயதில் பிரபாகரன் எனது கனவு நாயகன், விடுதலை புலிகளுக்கு நாகூரிலிருந்து நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் அலுவலகம் வரை பள்ளிமாணவர்களோடு உண்டியல் குலுக்கினேன்! மறக்க முடியாது!!
விசயத்துக்கு வருவோம்!

ராசீவ் எடுத்தது ஒரு அரசியல் முடிவு.

அதில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக தண்டிப்பீர்களா?

அப்படி பார்த்தால் மாற்று கருத்துகள் உடைய எல்லா தமிழ் தலைவர்களையும் கொலை செய்த பிரபாகரனுக்கு என்ன தண்டனை?

ஆயுதம் தூக்கி போராடினால் இழப்புகள் அதிகமாக இருக்கும், அவர்களுக்கும், அவர்களை ஆதரித்த மக்களுக்கும்! ஏற்று கொள்ள வேண்டும்!

ஆயுதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று வந்து விட்டு இழப்புகளுக்கு அஞ்சுவதா?

எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஈழ தமிழன் கண்டித்திருக்க வேண்டாமா?

தவறான பாதைக்கு போனதல்லாமல்,
அந்த மக்களுக்கு தன்னை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லாமல் வைத்த பிரபாகரனே இவ்வளவு குழந்தைகள், பெண்கள் எல்லோருடைய சாவுக்கும் காரணம்!
பொதுமக்களை பிணை வைப்பவன் (குழந்தைகள், பெண்கள் உட்பட!)
மணிதனா? நல்ல தலைவனா?
நானாக இருந்திருந்தால், அந்த நிலை வந்ததுமே எங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று போரை நிறுத்திவிட்டு, என் நெற்றியல் துப்பாக்கியை ஏந்தியிருப்பேன்!
அரசியல் ரீதியாக 30 வருடங்கள் போராடியிருந்தால் இந்நேரம் விடிந்திருக்கும்!

Thursday, May 14, 2009

பார்ப்பணர்களை குறை கூறத்தேவையில்லை!

பார்ப்பணர்களை குறை கூறத்தேவையில்லை, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? காங்கிரஸின் ஆட்சி முடிந்து, (பார்ப்பணர்களின் ஆட்சி முடிந்து?)
திராவிடர்களின் பொற்காலம் மலர்ந்து 40 திரு ஆண்டுகள் முடிந்து விட்டது,
என்ன நிலைமை இப்பொழுது...??
நமது ஆட்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயம்
(இந்த வேலை நடக்கணும்ணா இவ்ளோ ஆகும்களே, கூசாமல், கால்மேல் கால் போட்டுகொண்டு நம்ம ஆளுங்க பேசும்போது, அட டா...)
செய்ததுதான் சாதனை!
வரிசையாக ஒரு குடும்பத்தை ராஜ குடும்பமாக்கி அவர்களிடம் ஏமாந்ததுதான் நம்ம சாதனை! தயாநிதிமாறன் ஓரு ஐபிஎஸ் அதிகாரியால் சுனாமி நேரத்தில் நாகப்பட்டினத்தில் சிறிதளவே தொடப்பட்டதற்கு, சரியான ஒரு அறை வாங்கினார். நானே பார்த்தது! (அறைவாங்கியது போலிஸ் உயர் அதிகாரி!)
பதவியும் காசும் இருந்தால் தாழ்ந்த சாதியும் இப்படித்தான் இருப்பார்கள்,
எல்லா ஊரிலும் சாதிச்சண்டைகள் நமக்குள்ளேயேதான், பார்ப்பணர்களோடு இல்லை,
பார்ப்பண எதிர்ப்பை ஒதுக்கி விட்டு நமக்குள் இருக்கும் குறைகளை பற்றி விவாதித்து மேன்மை அடைவோம்!

கவிதாவின் இந்த பதிவை பார்த்து, எழுதிய பதிவு இது!
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/05/blog-post_2854.html