Friday, March 20, 2009

அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனையா? அநியாயம்...!



போயும் போயும் ஒரே ஒரு கொலை, இதுக்கா ஆயுள் தண்டனை?
அதுவும் அண்ணாச்சிக்கா?
என்ன நடக்குது தமிழ் நாட்டுல...?
சட்டம் ஒழுங்கு இருக்கிறதா இன்னும்? வக்கீல்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
அடக்கடவுளே...? பணக்காரனுக்கு எந்த மரியாதையும் இல்லாமல் போய்விட்டதா?
3 கல்யாணம்? ஒரே ஒரு கொலை?
அநியாயம், அண்ணாச்சி பணத்த மட்டும் சம்பாதித்து வைத்திருக்கிறார் போல, ஓரு கவுன்சிலரா கூட ஆகியிருக்க கூடாதா?
இவ்ளோ பணத்துக்கு எத்தனை ஜீவஜோதி கிடைக்கும், வயித்தெரிச்சல் பா.....!
சட்டம் ஒழுங்கு கெட்டுபோச்சுன்னு கத்துறவுங்களுக்கு தி.மு.க இதை ஒரு சாதனையாகவே சொல்லலாமே...!

Tuesday, March 10, 2009

உங்கள் ஓட்டு யாருக்கு...?

கூட்டணி எல்லாம் மறந்து விடுங்கள்,
உங்கள் ஓட்டு யாருக்கு என்று ஒரு வார்த்தையில் பின்னூட்டம் இடுங்களேன்...!

Sunday, March 8, 2009

உலகத்தின் கடைசி அடிமை இனம் தமிழினம், நெஞ்சு கொதிக்கிறதே....!




திராவிட கட்சிகளின் கொள்கை கொள்ளை அடிப்பது, அந்த ஐந்து வருட குத்தைகையை யாருக்கு அளிப்பது என்பதற்காக தேர்தல் ஆணையம் ஒரு தேதியையும் அறிவித்து உள்ளது.

- நாம் செய்ய வேண்டியது எல்லாம்,

அன்பு மணிக்கு, கனிமொழிக்கு, தயாநிதிக்கு இந்த தடவை எந்த இலாகவை சண்டை போட்டு வாங்குவார்கள் என்று வயிறெரியாமல் அவர்களுக்கே ஓட்டு போட்டு விடலாம், ரத்த கொதிப்பிலிருந்து விடுதலை!

இல்லை,
ராஜ குடும்பத்துக்கு அடிமையாக விருப்பம் இல்லை என்றால் மேற்கொண்டு இதை படிக்கலாம், கொஞ்சமாவது சிந்திக்கலாம்...!

விஜயகாந்த், யாருடனும் கூட்டனி வைக்கவில்லை என்றால் மட்டுமே அவருக்கு விழும் வாக்குகள் வளரும் அல்லது தொடரும், எங்கு கூட்டனி வைத்தாலும் அந்த கூட்டணிக்கு அவரால் வாக்குகள் கூடாது!

இலங்கை தமிழர்கள் விடயத்தில் உறங்கி கொண்டிருக்கும் திராவிட கட்சிகளை கண்டிக்க, தண்டிக்க இந்த விடயத்தில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியை தனியாக நின்றாலும் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும்!
தமிழகத்தை சேரந்த இ.ல.கணேசன் இந்த விடயத்தை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக அணுகி வருகிறார்!
தமிழர்கள் புதிய பாதையை ஆரம்பிக்க வேண்டிய தருணமாக இந்த தேர்தலை கருத வேண்டும்!
தேசிய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தேசிய கட்சியை நேரடியாக ஆதரிப்பது நல்லது. எந்த ஒரு மாநில கட்சியும் இதை கொள்ளை அடிக்கும் வாய்ப்பாகவே கருதுகிறது என்பது கண்கூடு!


தமிழர்களை மதிப்பதில்லை என்று முடிவெடுத்து விட்ட காங்கிரசை, காங்கிரஸ்காரணை தமிழ் மண்ணிலிருந்து விரட்டுவோம்!

தங்களது கருத்துக்கள் எதாயினும் பதிக!